fbpx
Connect with us

Cinemapettai

லீக்கான மாஸ்டர் படத்தின் சூட்டிங் வீடியோ.. விஜய் சேதுபதி மாஸ்

Videos | வீடியோக்கள்

லீக்கான மாஸ்டர் படத்தின் சூட்டிங் வீடியோ.. விஜய் சேதுபதி மாஸ்

தமிழ் சினிமா ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிப்பதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமும் படம் எப்படி வரும் என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மாநகரம், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால், வெறும் கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விருது விழாவிற்கு வந்த லோகேஷ் கனகராஜ் விரைவில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்படும் என கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் தற்போது விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கெத்தாக நடந்துவரும் காட்சி படமாக்கப்பட்ட போது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன. இதில் விக்ரம் வேதா சாயலில் விஜய் சேதுபதி தெரிவதால் கண்டிப்பாக மரண கேங்க்ஸ்டர் படம் ஒன்று உருவாகி கொண்டிருக்கிறது என நம்பலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top