தனுஷ் பிரச்சனையில் தானாக தலை விட்டு மாட்டிய விஜய் சேதுபதி.. ஓ இதுதான் விஷயமா!

சமீபகாலமாக தமிழ் சினிமா வட்டாரங்களில் அதில் சர்ச்சைகளை சந்திக்கும் நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியை தட்டுத்தடுமாறி இப்போது தான் க/பெ ரனசிங்கம் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருந்த செய்தி பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் அந்த படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தவர் தனுஷ் தானாம்.

பேன் இந்தியா நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் அந்த படத்தில் நடித்தால் நல்ல வியாபாரம் கிடைக்கும் என முதலில் அவரைத்தான் அணுகியுள்ளது படக்குழு.

ஆனால் அவரும் நேக்காக இந்த பிரச்சனையெல்லாம் வரும் என தெரிந்துகொண்டு விலகிய நிலையில் விஜய் சேதுபதி கிடைத்த வாய்ப்பை விட வேண்டாம் என கையெழுத்திட்டது தற்போது பஞ்சாயத்து ஆகிவிட்டது.

சூதுவாது தெரியாமல் இருக்கும் விஜய் சேதுபதி இனியாவது விபரமாக செயல்பட வேண்டும் என்கிறது சினிமா வட்டாரம்.

vijaysethupathi
vijaysethupathi