fbpx
Connect with us

Cinemapettai

ஆயிரம் சொல்லுங்க.. விஜய் சேதுபதிக்கு தங்க மனசு.. வடிவேல் பாலாஜி குடும்பத்துக்கு சமயத்தில் செய்த உதவி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆயிரம் சொல்லுங்க.. விஜய் சேதுபதிக்கு தங்க மனசு.. வடிவேல் பாலாஜி குடும்பத்துக்கு சமயத்தில் செய்த உதவி!

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு அடிபட்டு முன்னுக்கு வந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஜய் சேதுபதி. கதை தேர்வில் மிகவும் கவனம் செலுத்திய ஒவ்வொரு படங்களையும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் கொடுத்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் பேன் இந்தியா நடிகராக உயர்ந்து விட்டார். அடுத்ததாக அமீர் கான் நடிக்கும் ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.

அதுமட்டுமில்லாமல் தமிழிலும் அவரது படங்கள் வரிசை கட்டி வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. மேலும் பல படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த கொரானா சமயத்தில் மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க தயங்கிய போதும் தைரியமாக களத்தில் இறங்கி தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு எந்த நஷ்டமும் வரக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று திடீரென விஜய் டிவி பிரபலம் வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி, வடிவேல் பாலாஜி வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் குடும்பத்தினருக்கு சிறு பண உதவி செய்ததாகவும் தெரிகிறது. மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல்தான் வடிவேல் பாலாஜி இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top