ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் கூட்டணி போடும் விஜய் சேதுபதி.. மிரட்டலாக உருவாகும் கதை

தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் அசத்தி விடும் இவர் தற்போது ஒரு திரில்லர் கதையில் நடிக்க இருக்கிறார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் இந்த திரைப்படம் திரில்லர் பாணியில் பல திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான கதையாக உருவாக இருக்கிறதாம். மேலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல விஷயங்களும் இந்த படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வினோத் தற்போது அஜித்தை வைத்து ஏ கே 61 திரைப்படத்தை எடுத்து வருகிறார். விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் முடியும் தருவாயில் இருக்கிறது. அதன் பிறகு வினோத், விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்.

பொதுவாக வினோத் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அதே போன்று விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படமும் பல வியப்பூட்டும் காட்சிகளை உள்ளடக்கி எடுக்கப்பட இருக்கிறதாம். எப்படியாவது ஒரு பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்து விட நினைக்கும் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இணைவதற்கு ரொம்பவும் ஆர்வம் காட்டி வருகிறாராம்.

அந்த வகையில் முதல் முறையாக இணைய இருக்கும் இந்த கூட்டணி நிச்சயம் ஒரு வெற்றி கூட்டணியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் சில திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அது தவிர அவரின் நடிப்பில் விடுதலை, காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களும் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதனால் அந்த பட வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அவர் வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News