அப்பாடி ஒரு வழிக்கு வந்த விஜய் சேதுபதி.. விடிவுகாலம் பிறந்த 2 படங்கள்

விஜய் சேதுபதி தற்போது பான் இந்தியா பட நாயகனாக மாறி விட்டார். இவரின் கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் கொட்டிக் கிடக்கிறது. அந்த வகையில் இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனால் அவர் தற்போது மும்பையிலேயே மையம் கொண்டிருக்கிறார். ஆதலால் அவரை வைத்து இங்கே செய்ய இருந்த பல வேலைகள் தடைப்பட்டு நிற்கிறது. இவர் எப்போது திரும்பி வருவார் என்று பல இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல 2 காதல் படம் கூடிய விரைவில் ரிலீசாக இருக்கிறது. ஆனால் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் இன்னும் நடை பெறாமல் இருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது மும்பையில் இருந்து சென்னை வர இருக்கிறார்.

அவர் வந்ததும் இங்கே முடிக்க வேண்டிய சில வேலைகளை மும்முரமாக போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கும் முனைப்பில் இருக்கிறார். மேலும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் பிரமோஷன் வேலைகளும் படு ஜோராக நடைபெற இருக்கிறது.

அதுமட்டுமின்றி விஜய் சேதுபதியால் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விடுதலை படத்திற்கும் ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் கூடிய விரைவில் எடுக்கப்பட இருக்கிறது.

வரும் 28ம் தேதி விடுதலை படத்தின் ஷூட்டிங் வண்டலூர் பகுதியில் நடைபெற இருக்கிறது. இவை அனைத்தையும் விஜய் சேதுபதி ஒரே மூச்சாக முடித்துக் கொடுக்க திட்டம் போட்டிருக்கிறார். அந்த வகையில் இவர் ஒருவரின் வருகையால் இந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிவுக்கு வர இருக்கிறது.

Next Story

- Advertisement -