Videos | வீடியோக்கள்
விஜய்சேதுபதி பேசினா தப்பு.. அதையே இவர் பேசினா மட்டும் சரியா.. நல்லா இருக்குடா உங்க நியாயம்
விஜய் சேதுபதிக்கு சமீபகாலமாக ஏழரை சனி உச்சத்தில் இருக்கிறது போல. அவர் எது கூறினாலும் அது சர்ச்சை பொருளாகவே மாற்றிப் பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் அவர் கூறும் விஷயங்கள் எல்லாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு கூறிய விஷயம் தான்.
கொரானா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் உள்ள மக்கள் பழைய விஷயங்களை தோண்டி எடுக்க பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படித்தான் விஜய் சேதுபதி பேசிய செய்தி ஒன்று தற்போது பெரும் மத சர்ச்சையாக மாறிவிட்டது.
விஜய்சேதுபதி பிரபல தனியார் தொலைக்காட்சியில் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் சிலகாலம் தொகுப்பாளராக பணியாற்றினார். அப்போது அபிஷேகம் என்ற பெயரில் சாமியை குளிப்பாட்டும்போது மக்களுக்கு காட்டுகிறார்கள், ஆனால் ஏன் உடைமாற்றும்போது மட்டும் காட்டவில்லை என ஒரு சிறுமி அவரது தாத்தாவிடம் கேட்பதைப் போல சிறு கதை கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த விஷயத்தை இதற்கு முன்பே கிரேசி மோகன் என்பவர் ஒரு நிகழ்ச்சியில் கூறி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அடிப்படையாக வைத்துத்தான் விஜய் சேதுபதி இந்த செய்தியை கூறியுள்ளார். அப்போது கோபப்படாத மதப்பிரியர்கள் தற்போது விஜய் சேதுபதியை மட்டும் குறிவைத்து தாக்குவது சரியா என கோலிவுட் வட்டாரங்கள் கேள்விகள் எழுந்துள்ளன.
இதை எப்படித் தேடிக் கண்டுபிடித்த ரசிகர்கள் தற்போது விஜய் சேதுபதி பேசியதற்கு சப்போர்ட் செய்கிறோம் என சமூக வலைதளங்களில் நேற்று ரசிகர்கள் அனைவரும் திரண்டனர்.
