Connect with us

Cinemapettai

பிசாசு 2-ல் விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான கேரக்டர் கொடுத்த மிஸ்கின்.. இருக்குடி கச்சேரி!

myskkin-vjs

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிசாசு 2-ல் விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான கேரக்டர் கொடுத்த மிஸ்கின்.. இருக்குடி கச்சேரி!

நடிகர்களுக்காக படம் பார்க்கும் ரசிகர்கள் ஒரு சில இயக்குனர்களை நம்பி தியேட்டருக்கு செல்வார்கள். அப்படி பலருக்கும் பேவரைட் இயக்குனராக இருப்பவர் தான் இயக்குனர் மிஷ்கின்.

இவரது ஒவ்வொரு படங்களும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். இதன் காரணமாகவே மிஷ்கின் படம் வெளியாகும்போதும் முன்னணி இயக்குனர்களின் படம் வெளியாவதை போல ஒரு கூட்டம் இருக்கும்.

அந்த வகையில் கடைசியாக மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வந்தார்.

மேலும் அந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் செய்திகள் வந்தன. ஆனால் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது கடைசிவரை தெரியாமல் இருந்தது.

பலரும் ஆண்ட்ரியாவின் கணவர் வேடத்தில் நடிப்பார் என ஒருபக்கம் கிளம்பிவிட்டனர். ஆனால் தற்போது மிஷ்கின் விஜய் சேதுபதியை எப்படி வச்சு செஞ்சுள்ளார் என்று பற்றி தகவல் கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதிக்கு பேயோட்டும் சாமியார் வேடம் கொடுத்துள்ளாராம் மிஸ்கின். மாஸ்டர் படத்தில் மாஸ் வில்லனாக வந்தவரை சாமியார் வேஷம் போட்டு அலைய விட்டிருக்கிறார் மிஸ்கின். இவர் மட்டும்தான் எல்லாரையும் வேற மாதிரி யோசிக்கிறார்.

pisasu-2-cinemapettai

pisasu-2-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top