விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது கோடம்பாக்கத் தில் வழக்கமான செய்தியாகி விட்டது.

ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு சற்றும் குறை வைக்காமல் உரு வாகி வருகிறது `ஜுங்கா’. கோகுல் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.

vijaysethupathy

இந்நிலையில், இப்படத் தின் படப்பிடிப்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள் ளதாம். இத்தகவலை சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். `ஜுங்கா’வின் முக் கிய காட்சிகள் அனைத் துமே வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் விஜய் சேதுபதி பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது.

ஒரு புதிய பொருள் மார்க்கெட்டுக்கு வருகிறதென்றால், அந்தப் பொருள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பொருட்டு சஸ்பென்ஸுடன் விளம்பரம் தயாரிக்கப்பட்டு டி.வி சேனல்களில் உலவவிடுவது வழக்கம்.

vijay sethupathy

அப்படி ஒரு விளம்பரம் சில நாள்களாக டி.வி சேனல்களில் வந்துக்கொண்டிருக்கிறது. வழக்கமான சஸ்பென்ஸ் விளம்பரம்தானே என்று அதைக் கடக்கமுடியவில்லை. ஏனென்றால் அதில் நடித்திருப்பது விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி மட்டுமல்ல, மிமிக்ரி சேது, விவேக் பிரசன்னா, லிங்கா, ‘மாரி’ ஜார்ஜ் எனப் பலர் நடித்திருக்கும் இந்த விளம்பரம், ஒரு மன்னர் காலத்து தர்பார் போன்று எடுக்கப்பட்டிருக்கிறது.

இது என்ன மாதிரியான விளம்பரமாக இருக்கும் என்று சிலரிடம் விசாரித்தபோது, பிரபல சேமியா கம்பெனி ஒன்று புதிதாக ஆர்கானிக் உணவு பொருள்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதற்காகவே விஜய் சேதுபதி நடிப்பில் விளம்பரம் தயாரிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

vijay sethupathy

தீபாவளிக்கு முன்னரே இந்த சஸ்பென்ஸ் வீடியோவை வெளியிட்டு, தீபாவளியன்று அந்த சஸ்பென்ஸை உடைக்கலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நினைத்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் அதில் காலதாமதம் ஏற்பட்டு தற்போதுதான், சஸ்பென்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.