fbpx
Connect with us

Cinemapettai

சினிமாவிற்கு முன் சன் டிவி சீரியலில் நடித்துள்ள விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ

Videos | வீடியோக்கள்

சினிமாவிற்கு முன் சன் டிவி சீரியலில் நடித்துள்ள விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ

விஜய் சேதுபதி சினிமாவில் நீண்ட காலம் முயற்சி செய்து தற்போது தான் ஒரு நல்ல நிலைமையை அடைந்துள்ளதாக பல மேடைகளில் கூறியுள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் விஜய் சேதுபதி பல அவமானங்களை சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

நான் மகான் அல்ல, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி முதன்முதலாக ஹீரோவாக நடித்த படம் தென்மேற்குப் பருவக்காற்று. இந்த படத்திற்காக சரண்யா தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அதற்கு அடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் இவருக்கு ஒரு நல்ல இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

தற்போது வரை வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களாக இருந்தால் வில்லனாக கூட நடிக்க ரெடியாக உள்ளார் விஜய் சேதுபதி. அப்படித்தான் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் 2006 ஆம் ஆண்டு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெண் என்ற சீரியலில் பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சீரியலில் நடித்த விஜய் சேதுபதியின் வீடியோ வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top