காலா படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா, உள்ளிட்ட படங்ககளை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கயுள்ளார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது.

இதனை அடுத்து இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக ரஜினியுடன் இணையவுள்ளார். அடுத்து இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கபோவதாக கூறப்பட்டது.

vijay sethupathy

தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது அதாவது விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிப்பில் உருவான ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.