Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுட்டக்கதை.! அடுத்த சிக்கலில் விஜய்சேதுபதியின் 96 படம்.!
சினிமாவில் 100 கோடியில் இருந்து 200 கோடி வரை செலவு செய்து படம் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், படத்திற்கு கதை எழுதும் கதாசிரியர்களுக்கு மனசு வந்து ஒரு லட்சம் இரண்டு லட்சம் கொடுத்து கதையை வாங்கி படம் செய்வது என்பது இயலாத காரியமாக இருந்து வருகிறது.

vijay sethupathy
பல இயக்குனர்கள் கொரியன் படத்தை சுடுகிறார்கள் அப்படி இல்லை என்றால் அசிஸ்டண்ட் இயக்குனர்கள் கதையை திருடி அவர்களின் வயிற்றில் அடிப்பார்கள், இப்படித்தான் பல படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தற்பொழுது லேட்டஸ்டாக ஒரு தகவல் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள், சமீபத்தில் வெளியாகி இருக்கும் விஜய் சேதுபதியின் 96 படம் பற்றிதான், 96 படத்தின் கதை விச்சு என்கின்ற ஒரு அசிஸ்டண்ட் இயக்குனரின் கதை என்ன கூறியுள்ளார், இந்த கதை எனது வாழ்க்கையில் நடந்ததாகவும், நான்கு வருடத்திற்கு முன்பே மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு இந்தக் கதையை நான் கூறியுள்ளேன்.
ஆனால் படத்தை என்னிடம் கொடுக்காமல் ஒளிப்பதிவாளர் பிரேமுக்கு கொடுத்திருக்கிறார், இந்த திருட்டு ஒருநாள் கண்டிப்பாக வெளியாகும் இதே படத்தை நான் இன்னும் மிக சிறப்பாக எடுத்து வெளியிடுவேன் என பொங்கி எழுந்துள்ளார். இப்படி நமது சினிமாவில் சொந்த சரக்கை விட சுட்டு படம் எடுப்பவர்கள் தான் அதிகம்.
