வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக் பாஸ் வீட்டுக்குள் போகப்போகும் விஜய் சேதுபதியின் மகன்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Vijay sethupathi Son entry in Bigg boss house: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களுமே மக்களிடம் நல்ல பிரபலமாகி விடுவார்கள். அந்த அளவிற்கு பிக் பாஸ் பலருக்கும் வாழ்க்கை கொடுத்திருக்கிறது. இதில் என்னதான் சண்டை சச்சரவுகள் வெறுப்பு என இருந்தாலும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்களிடம் பிரபலமாவதற்கு வாய்ப்பு கிடைத்துவிடும்.

அதனால் தான் என்னமோ விஜய் சேதுபதியின் மகனும் பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு தயாராகி விட்டார். அதாவது இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கிய நிலையில் முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இவருடைய பாணி எப்படி இருக்கும், போட்டியாளர்களை எந்த மாதிரி வழி நடத்தப் போகிறார் என்பதை பார்ப்பதற்கு மக்கள் இன்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் முன்னணி நடிகராக பல படங்களில் பிசியாக நடித்து வெற்றி நாயகனாக வந்து கொண்டிருந்த விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐம்பதாவது படமான மகாராஜா படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெருத்த லாபத்தை கொடுத்தது. இதனை அடுத்து விடுதலை இரண்டாம் பாகமும், மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி பிஸியாக ஹீரோவாக பயணித்து வரும் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்குவதற்கு தயாராகி விட்டார். இவரை போல நானும் ஒரு நடிகராக நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் களம் இறங்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் படத்தில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது முதன்முறையாக ஹீரோவாக ஃபீனிக்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியிருக்கிறார். முதல் முறையாக இயக்குனராக இவரும் அடியெடுத்து வைக்கிறார். அந்த வகையில் இவர்கள் இருவருமே இப்படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்து ரிலீஸ் பண்ணுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

அத்துடன் பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கப் போகிறார். ஆனால் போட்டியாளர்களில் ஒருவராக இல்லை படத்தின் பிரமோஷனுக்காக ஃபீனிக்ஸ் டீம்முடன் கெஸ்ட் ஆக நுழையப் போகிறார். பொதுவாக இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் ஏதாவது ஒரு படத்தின் பிரமோஷன்காக மொத்த டீமும் உள்ளே பிரமோஷன் பண்ணியிருக்கிறார்கள்.

phonicx
phonicx

அதே மாதிரி சூர்யா சேதுபதி நடிப்பில் வரவிருக்கும் படத்தின் ப்ரோமோஷன்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த பீனிக்ஸ் படத்தின் டீசரில் முதல் காட்சியை சிறுவர் சீர்திருத்த சிறையுடன் துவங்கியது. கையில் விலங்கு மாட்டிக்கொண்டு குற்றவாளியாக சீர்திருத்த பள்ளியில் முகத்தை மூடிய நிலையில் சூர்யா அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இதில்சண்டை காட்சிகளில் ஈடுபட்டு ஆக்சன் படமாக மக்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் மகனும் நல்ல ஒரு கதாநாயகன் என்ற பெயரை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News