fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நான்கு இயக்குனர்கள் இணைந்து கலக்கப்போகும் விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்”. ஹீரோயினாக நடிக்கப்போவது யார் தெரியுமா ?

vijaysethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான்கு இயக்குனர்கள் இணைந்து கலக்கப்போகும் விஜய் சேதுபதியின் “துக்ளக் தர்பார்”. ஹீரோயினாக நடிக்கப்போவது யார் தெரியுமா ?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்றைய தேதிக்கு கோலிவுட் மட்டுமன்றி அக்கம் பக்கத்துக்கு வுட்களிலும் மோஸ்ட் வான்டட் நடிகர். சங்கத் தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதம் போன்ற படங்கள் ஷூட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன் என பல்வேறு நிலைகளில் உள்ளது. அதுமட்டுமன்றி முரளிதரன் பயோபிக் மற்றும் துக்ளக் தர்பார் விரைவில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துக்ளக் தர்பார் – 96 படத்தின் சக்ஸஸ் மீட்டில் இதே தயாரிப்பாளருடன் (பிரேம்குமார், பாலாஜி தரணீதரனின் நண்பரான) டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில்  படம் நடிப்பதாக அறிவித்தார்.

இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து வயகாம் 18 ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றனர். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகரும் இயக்குனருமான ரா. பார்த்திபன் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

96 பட இயக்குனர் மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதக்காதி படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் வசனங்களை எழுதுகிறார்.

ஆக மொத்தத்தில் இயக்குனர் டெல்லி பிரசத்தாக இருப்பினும், மீதி மூவர் நடிகர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர் அவதாரங்கள் எடுக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top