Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் விஜய் சேதுபதி இணையும் படத்தின் அசத்தலான தமிழ் தலைப்பு மற்றும் வீரமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சிம்பு – ஹன்சிகா நடிப்பில் வாலு, பின்னர் விக்ரம் – தமன்னாவின் ஸ்கெட்ச் படங்களை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் மூன்றாவது படம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்து வருகிறார்.
விஜயா புரொடக்ஷன்ஸ் பானேரில் இப்படம் ரெடியாகி உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் மெர்வின் இப்படத்துக்கு இசை. சூரி, மொட்டை ராஜேந்திரன் படத்தில் காமெடியன் ரோலில் கமிட் ஆகியுள்ளனர்.
முன்பு கிசு கிசுத்தது போலவே இப்படத்தின் தலைப்பு “சங்கத்தமிழன்” என்பது தான்.
Here it is, presenting you the First look of #Sangathamizhan #VVV
@VijaySethuOffl @vijayfilmaker @RaashiKhanna @sooriofficial @ActorSriman @Cinemainmygenes @VelrajR @ActionAnlarasu @iamviveksiva @MervinJSolomon @SonyMusicSouth @RIAZtheboss pic.twitter.com/o2fdADW1Ly— Vijaya Productions (@VijayaProdn) May 7, 2019
மேலும் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதியின் லுக்குடன் போஸ்டர் வெளியானது.
