சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். சென்ற 19 வது எபிசோடில் போட்டியாளர்கள் மணக்க மணக்க சமைத்தனர். இந்த எபிசோடில் வித்தியாசமான முயற்சியாக பூக்களை வைத்து தான் சமைக்க வேண்டுமாம்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நடிகை காயத்ரி வருகை தந்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் நடிகை காயத்திரியை மேடைக்கு அழைத்து வந்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதில் நடிகை காயத்ரி அணிந்திருந்த உடையில் சில முக்கிய பக்கங்களை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை காயத்ரிக்கு அன்பு பரிசாக மேடையில் வைக்கப்பட்டிருந்த மலர்களை காட்டினார் விஜய் சேதுபதி. மேடையில் மலர்கள் அனைத்தும் அழகுக்காக வைக்கப்பட்டிருக்கின்றது என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் ட்விஸ்ட் என்னவென்றால் அவையில் வைக்கப்பட்டிருந்த மலர்களை கொண்டு தான் சமைத்தாக வேண்டுமாம். எந்த போட்டியாளருக்கு எந்தப் பூ என்பதில் பாட்டுக்கு பாட்டு நடத்தி முடிவெடுத்துள்ளனர். அதிக பாட்டு பாடியவர், அவர் விரும்பும் பூவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இதில் கிருத்திகாவிற்கு செம்பருத்தி பூ கிடைத்தது. மணிக்கு துலுக்க சாமந்தி பூவும், சுமித்ராவிற்கு நஸ்டார்சியமும், சுனிதாவிற்கு செவ்வந்தி பூவும், நித்யாவிற்கு ரோஜா பூவும், தேவகிக்கு தியந்தஸ் பூவும் மற்றும் வின்னிக்கு மல்லிகைப்பூவும் கிடைத்தது. இவ்வாறாக ஒவ்வொரு போட்டியாளருக்கு ஒவ்வொரு கிடைத்துள்ளது.
இவர்களுக்கு 60 நிமிடம் அவகாசம் அளிக்கப்பட்டு, அதற்குள் பூக்களை வைத்து உணவு தயாரிக்க வேண்டுமாம். இவர்களில் செம்பருத்தியை வைத்து சமைத்த கிருத்திகா சேப் ஜோனான பால்கணிக்கு முதலில் சென்றார். அவரை தொடர்ந்து துலுக்க சாமந்தியை வைத்து சமைத்த மணி, அர்ச்சனை தட்டு போல் அலங்காரம் செய்ததால் அவரும் சேப் ஜோனிற்கு அனுப்பப்பட்டார்.
அவர்களைப் பின் தொடர்ந்து தேவகி மற்றும் வின்னி ஆகியோரும் சேப் ஜோனிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் சுனிதா, சுமித்ரா மற்றும் நித்யா ஆகியோர் எலிமினேஷன் ரவுண்டிற்கு தேர்வாகி உள்ளனர்.