Tamil Cinema News | சினிமா செய்திகள்
குடிமக்களே.. அரசின் பயங்கரவாதத்தை காட்டும் விஜய் சேதுபதியின் லாபம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
‘லாபம்- பகல் கொள்ளை’ : விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி ஜனநாதன் இயக்கும் படம். ஷ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு, டி இமான் இசை. மேலும் இப்படத்தில் சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன், கலையரசன் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அவரது நண்பர் ஆறுமுககுமாரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் லுக் நேற்று விருது வழங்கம் நிகழ்ச்சி ஒன்றில் வெளியானது. இப்போஸ்டரில் கையில் மைக்கும் ஒரு தோளில் ஒலிப்பெருக்கியுமாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. பேக் ட்ராப்பில் ஓவியர் சந்துருவின் சிலைகள் உள்ளது. துப்பாக்கியுடன் குறி பார்க்கும் ஒருவன், ஏர்கலப்பையுடன் விவசாயி, குழந்தையுடன் போராடும் பெண், ஆவேசமாக கோஷம் போடும் மாணவி என உள்ளது.

laabam FLP
அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் மக்கள் மற்றும் அதனை அடக்குபவன் என அனைவரையும் குடிமக்களே என சொல்லாமல் சொல்லியுள்ளார். நம் கையை வைத்தே நம் கண்ணை குத்தும் உலக அரசியலை இப்போஸ்டரில் அசால்டாக சொல்லியுள்ளனர் படக்குழு.
