Vijay Sethupathi-Kavan-U Certificatte

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கவண்’ படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கவண்’. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைத்து வருகிறார். முழுபடப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகளை துரிதப்படுத்தியது படக்குழு.

மேலும், இசை வெளியீடு முடிந்துள்ள நிலையில் படம் எப்போது வெளியீடு என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இது குறித்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா “இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தணிக்கை பணிகள் முடிந்து மார்ச் 31-ம் தேதி வெளியாகும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தணிக்கை அதிகாரிகள் இப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். தணிக்கை பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘கவண்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.