‘அட்டகத்தி’ நந்திதாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்த படம் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’.

குமுதா கதாபாத்திரத்தில் நந்திதா நடித்திருந்தார். ‘குமுதா ஹாப்பி’ என அடிக்கடி இப்படத்தில் விஜய் சேதுபதி பேசிய வசனம் டிரெண்டானது. ஆனாலும் இந்த ஜோடி மீண்டும் 2 வருடம் கழித்தே, ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இணைந்திருக்கிறது. விஜய் சேதுபதி தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து வந்தாலும் ஏற்கனவே நடித்த படத்தின் 2ம் பாகம் என எதிலும் நடிக்கவில்லை.

அதிகம் படித்தவை:  கமல், அஜித், விக்ரம் வரிசையில் விஜய்சேதுபதி

தற்போது அந்த பேச்சு எழுந்துள்ளது.‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரா படத்தின் 2ம் பாகம் உருவாக்குவதற்கான பேச்சு நடக்கிறது. முதல்பாகத்தை இயக்கிய கோகுல் இதனை இயக்க உள்ளார். விஜய் சேதுபதியே இதிலும் நடிப்பார் என தெரிகிறது. நயன்தாரா, தமன்னா என்று பாப்புலர் ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி மீண்டும் நந்திதாவுடன் ஜோடி சேருவாரா என்ற சந்தேகமும் கூடவே எழுந்துள்ளது.