Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-sethupathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த 60 வயது நடிகருக்கு வில்லனா? விஜய் சேதுபதியை பார்த்து சிரிக்கும் ரசிகர்கள்

விஜய் சேதுபதி சமீபகாலமாக தான் ஒரு பெரிய ஹீரோ என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சின்ன படமாக இருந்தாலும் நடித்து விடுகிறார். அந்த வகையில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் கிட்டத்தட்ட இருபத்தி ஆறு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

நிக்க கூட நேரமில்லாத அளவுக்கு தொடர்ந்து பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு பெரிய பெயரும் புகழும் கிடைக்க காரணமாக இருந்தது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் தான் என்று சொன்னால் மிகையாகாது.

அந்த படத்தில் அவர் வில்லனாக நடித்த பிறகுதான் இவ்வளவு பெரிய வளர்ச்சி. அதுவும் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் விஜய் சேதுபதியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். தற்போது தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் விஜய் சேதுபதிதான் வில்லன்.

அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கில் நீண்ட காலமாக ஹீரோவாக நடித்து வரும் 60 வயதான நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஒரு காலத்தில் பாலகிருஷ்ணா மாஸ் நடிகராக இருந்தாலும் சமூக வலைதளம் வளர்ச்சி அடைந்த பிறகு அவருடைய பழைய நடிப்பு களையும் நடனங்களையும் மீம்ஸ் வீடியோவாக கிரியேட் செய்து ரசிகர்கள் மத்தியில் ஒரு காமெடி நடிகராக மாற்றிவிட்டனர்.

இதனாலேயே விஜய் சேதுபதி அவருடன் நடிப்பதை நினைத்து கோலிவுட்டில் கேலி கிண்டல்கள் அதிகமாகி உள்ளது. பாலகிருஷ்ணா நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவதில்லை, ஆனாலும் ஏன் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பேன் என்று அடம்பிடித்து கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

balakrishna-actor-cinemapettai

balakrishna-actor-cinemapettai

Continue Reading
To Top