மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜய்சேதுபதி.. 5 ஹிந்தி படம், மும்பை போறது எல்லாம் புருடாவா!

விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் தொடர்ந்து வெளியான துக்ளக், தர்பார் உட்பட பல படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதனால் விஜய் சேதுபதியே பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வந்தனர்.

எங்கு பார்த்தாலும் விஜய்சேதுபதியின் முகமாகவே இருக்கிறதே என தியேட்டர் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் உட்பட பலரும் விஜய் சேதுபதி கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறி வந்தனர். ஆனால் விஜய் சேதுபதி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பல படவாய்ப்புகளை பெற்று வருகிறார்.

ஹிந்தியில் தென்னிந்திய நடிகர்கள் நடிப்பது கஷ்டம். அதுவும் ஒரு படத்திற்கு மேல் அவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் போன்ற பேச்சுக்கள் சினிமாவில் வந்துள்ளனர். விஜய் சேதுபதி ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். வரிசையாக 5 படங்கள் கமிட்டாகியிருக்கிறார். கேத்ரினா கைப் உடன் நடிக்க இருக்கிறாராம்.

அதனால்தான் காற்றுவாக்கில் ரெண்டு காதல் படத்தில் சூசகமாக அடுத்து, நான் காதலிப்பது கேத்ரினா கைப் என்றெல்லாம் கூறியிருப்பார். ஆனால் அவர் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம். மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களை மட்டும் நடித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அவர், இப்பொழுது அடுத்து 2 படங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

குக்கூ பட இயக்குனர் ராஜ்குமார் அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது, விஜய் சேதுபதியும் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அனேகமாக இந்த கதை பிடித்திருந்தால் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்பது உறுதியாக தெரிகிறது. இப்படி தமிழ் படங்களிலேயே தொடர்ந்து கமிட்டாகும் விஜய் சேதுபதி பாலிவுட்டிற்கு பறந்து செல்லப் போவது என சொன்னதெல்லாம் புருடாவா என சிலர் கிண்டல் அடிக்கின்றனர்.

Next Story

- Advertisement -