Connect with us
Cinemapettai

Cinemapettai

vikram-movie-vijay-sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்னும் அவருக்கு மட்டும் வில்லனாக நடிக்காத விஜய் சேதுபதி.. இயக்குனரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்

தமிழ் சினிமாவின் வில்லன் விஜய் சேதுபதி அடுத்ததாக அஜித்துடன் நடிப்பது பற்றி செய்திகள் வெளிவருகின்றன.

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு என முத்திரை பதிக்கும் பல கதாநாயகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது உள்ள நடிகர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து கதாநாயகனாக யாரும் எதிர்பார்க்காத அளவில் வேகமாக வளர்ந்தார் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம்.

நடித்தால் கதாநாயகன் மட்டுமல்லாமல் இந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வில்லனாகவும் மாற முடிவெடுத்தார். ரஜினியுடன் பேட்ட என்ற படத்தில் நடித்தாலும் அந்த அளவிற்கு பெயர் வரவில்லை ஆனால் விஜயுடன் நடித்த மாஸ்டர் படமே அவருக்கு வில்லன் என்ற முக்கியத்துவம் கொடுத்த திரைப்படம்.

Also Read : விஜய் சேதுபதியின் நிறைவேறாத ஆசை.. வெளிப்படையாக பேட்டியில் கூறிய சம்பவம்

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் Ak62 படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் கதையை என்னிடம் கூறினார். மிகவும் சுவாரஸ்யமான கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் அந்த கதைக்காக நான் காத்திருக்கிறேன் என்று பதிலளித்தார்.

அவர் சொல்லும் பதிலில் நன்றாக தெரிகிறது இந்த படத்தில் அவர் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்று. ஏனென்றால் அவர் நடிக்காத ஒரே உச்சநட்சத்திரம் Ak மட்டுமே அவர் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அஜித்துடன் வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று. தற்போது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். அதனால்தான் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் கதையை விஜய்சேதுபதியிடம் கூறியிருக்கிறார்.

Also Read : மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

படத்தை பரபரப்பாக மாற்ற விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்தால் மட்டுமே தற்போது இருக்கும் சூழ்நிலை. இதை நன்றாக புரிந்த விக்னேஷ் சிவன் அழகாக காய் நகர்த்தி வருகிறார். விஜய் சேதுபதி விக்ரம் படத்திலும் திடீரென சேர்க்கப்பட்டார். அவருக்காகவே அந்த கதாபாத்திரம் மேலும் வழு சேர்க்கப்பட்டது இயக்குனரால்.

விஜய் சேதுபதி கமர்சியலாக நடிக்கும் படங்கள் மற்றும் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் அனைத்தும் மோசமான தோல்வியை தழுவுகிறது. இதனால் மனமுடைந்த விஜய் சேதுபதி தற்போது அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை விடமாட்டார். இதேபோல் அடுத்து கமலுடன் அவரே வாய்ப்பை கேட்டு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : 5 வருடமா தயாரிப்பாளர் காசை நாசமாக்கிய விஜய் சேதுபதி.. ஹீரோவாக மண்ணைக் கவ்விய 10 படங்கள்

Continue Reading
To Top