புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

அல்லு அர்ஜுனை ஓரங்கட்டிவிட்டு, ஷாருக்கானுக்கு பச்சை கொடி காட்டிய விஜய் சேதுபதி

ஷாருக்கின் ஜவான் படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் விஜய்சேதுபதி வில்லனாக  என நடிக்கிறார் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் இயக்குனர் அட்லீயின் ‘ஜவான்’ படத்தில் மட்டுமே விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்றும், வேறு எந்த தெலுங்கு படங்களிலும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள மிகப் பிரபலமான தெலுங்குப் படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக பல ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் கால்ஷீட் பிரச்சனையால் தற்போது விஜய்சேதுபதி புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக விஜய்சேதுபதி வில்லனாக பட்டையை கிளப்பி வருகிறார். ரஜினி, கமல் , விஜய் என கோலிவுட் நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்த இவர், இப்போது பாலிவூட் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.

- Advertisement -spot_img

Trending News