அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ‘ப்ரேமம்’ எப்படி கேரளாவை மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என எல்லா மாநிலங்களிலும் ஒரு ‘காட்டு’ காட்டியதோ அதுபோலவே இப்போது தெலுங்கு படம் ஒன்று தமிழ்நாட்டு ரசிகர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

அந்தப் படத்தின் பெயர் ‘அர்ஜுன் ரெட்டி’. திகட்ட திகட்ட காதலையும், காதல் தோல்வியின் வலியையும் சொன்ன அந்தப் படம் ஆந்திராவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதிகம் படித்தவை:  வலியை புரிந்துகொள்ளாத விஜய்சேதுபதி.! கோவத்தில் கொந்தளித்த தயாரிப்பாளர்கள்

இந்நிலையில் வழக்கம் போல அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கிற்குப் பெரும் போட்டி நிலவுகிறது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கின் ஹீரோவாக நடிக்கப் பலர் முயன்ற வேளையில் சிம்புவிற்கும், விஜய் சேதுபதிக்கும்தான் பயங்கரப் போட்டியாம்.vijaysethupathi

அதிகம் படித்தவை:  Sethupathi Movie Photos

இதனை கேள்விப்படும் சமூக வலைத்தளத்தின் பெரும்பாலான ரசிகர்கள் ‘’யப்பா… சிம்பு நடிச்சா அந்தப் படம் எந்த ஜென்மத்துல ரிலீசாகும்னு தெரியாது.. பேசாம விஜய் சேதுபதியே நடிச்சா எங்களுக்கு செம ட்ரீட்டா இருக்கும்’’ என்று பதிவிடுகிறார்கள்.