பயங்கர பிஸியா இருக்கும் விஜய் சேதுபதி.. அடுத்து அடுத்து இருக்கும் படவாய்புகள்

தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு நல்ல மவுசு இருக்கிறது. அதை நன்றாக புரிந்து கொண்ட அவர் தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிசியாக மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அவர் மலையாளத்தில் நடித்த திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அதை தொடர்ந்து அவர் தமிழில் விடுதலை உட்பட இரண்டு படங்களும், ஹிந்தியில் மூன்று படங்களும் கைவசம் வைத்துள்ளார். அதிலும் அவருக்கு பாலிவுட் பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.

Also read:விக்ரம் வெற்றியால் அரசியலை மறந்த உலக நாயகன்.. 3 பெரிய நடிகர்களுக்கு விரித்த வலை

தற்போது அவர் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அங்கே அவருக்கு தங்குவதற்கு என்று பிரம்மாண்டமான ஒரு அப்பார்ட்மெண்டில் தனி பிளாட்டை அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்களாம். அதில் அவருக்கு சகல வசதிகளும் இருக்கிறதாம்.

அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு சமையல்காரர் ஒருவரும் அங்கேயே தங்கி அவருக்கு தேவையான உணவை தயாரித்து கொடுக்கிறாராம். இப்படி மாதத்தில் முக்கால்வாசி நாட்கள் மும்பையிலேயே இருக்கும் அவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னைக்கு வந்து தன் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறாராம்.

Also read:சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்.. சோழ சாம்ராஜ்யத்தை பெருமைப்பட வைத்த மணிரத்னம்

அதிலும் அவர் சில மணி நேரங்கள் மட்டும் மனைவி, குழந்தைகளுடன் இருந்துவிட்டு உடனே கிளம்பி மும்பைக்கு சென்று விடுகிறார். அவருடைய நடிப்பிற்கு அங்கே நிறைய ரசிகர்கள் உருவாகி இருப்பதால் தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து கொண்டிருக்கிறது.

மேலும் மல்டி ஸ்டார் வகையான படங்கள் பாலிவுட்டில் வெகு சாதாரணம் என்பதால் விஜய் சேதுபதி அதுபோன்ற கேரக்டர்களில் நடிப்பதற்கு சம்மதித்து அடுத்ததடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகிறாராம். அந்த வகையில் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவை மறந்துவிட்டு பாலிவுட்டிலேயே செட்டில் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Also read:18 வயது பையனாக அடையாளம் தெரியாமல் இருக்கும் விஜய்சேதுபதி.. ட்ரெண்டாகும் போட்டோ

- Advertisement -spot_img

Trending News