Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர்களுக்கு அப்படி என்ன கோபம்.. இப்படியெல்லாம் பண்றாங்க என வருத்தம்
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.
சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் வலம் வருகிறார். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் வில்லனாகவும் நடிக்க தயங்குவதில்லை.
இதனாலேயே ரஜினியின் பேட்ட மற்றும் விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இது ஒருபுறமிருக்க ஹீரோவாக ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மேலும் பல படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இந்நிலையில் தான் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கா/பெ. ரணசிங்கம் படம் OTT தளத்தில் வெளியாவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் மாமனிதன், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் போன்ற படங்களும் நேரடியாக OTT தளங்களில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இது விஜய் சேதுபதிக்கு தெரியாமல் நடப்பதுதான் அநியாயம்.
விஜய் சேதுபதி தரப்பிலிருந்து பெரும்பாலும் தியேட்டரில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்களாம். இருந்தாலும் தயாரிப்பாளர்கள் இப்படி செய்வது அவருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
