fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

800 படத்தில் இருந்து வெளியேறிய விஜய் சேதுபதி- அந்த முடிவை அறிவித்தது யார் தெரியுமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

800 படத்தில் இருந்து வெளியேறிய விஜய் சேதுபதி- அந்த முடிவை அறிவித்தது யார் தெரியுமா

இலங்கை கிரிக்கெட் டீம்மின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ‘800’ எனும் பெயரில் திரைப்படமாக ரெடியாகிறது. முரளிதரனாக நடிக்கவிருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. சமீபத்தில் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் காட்சிகள், தன்னார்வலர்கள் என பலரும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

சில பல மாதங்களுக்கு முன்பே படத்தின் அறிவிப்பு வந்தது. பின்னர் சேது இப்படத்தில் இருந்து விளகினார். ஆனால் சமீபத்தில் ஐபிஎல் போட்டி சமயத்தில் மோஷன் போஸ்டர் வெளியானது. அதன் காட்சிகளை பார்த்த பலர் விஜய் சேதுபதி நடிக்கவே கூடாது என சொல்ல ஆரம்பித்தனர்.

சமூகவலைத்தள பக்கங்களில் முரளிதரனை விட, விஜய் சேதுபதி மீது எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கியது. விஜய் சேதுபதி எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் இன்று முரளி தனது பயோபிக் படத்தில் இருந்து விலகுமாறு சேதுவை கேட்டுள்ளார்.

இந்த நிலையில் தம்முடைய வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரன் ஒரு வேண்டுகோள் விடுத்து இன்று மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

vijay sethupathi tweet

அதில், விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்க் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன் எனவும் முத்தையா முரளிதரன் கூறியிருந்தார்.

மேலும், எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை என்றும் முரளி கூறியிருந்தார்.

அந்த அறிக்கையயை தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி வணக்கம் என மக்கள் செல்வன் ஷேர் செய்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top