fbpx
Connect with us

தொடர்ந்து கல்லடிபடும் விஜய் சேதுபதியின் படங்கள்.. இந்த படமாவது காப்பாற்றுமா?

vijay-sethupathi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடர்ந்து கல்லடிபடும் விஜய் சேதுபதியின் படங்கள்.. இந்த படமாவது காப்பாற்றுமா?

கடந்த சில வருடங்களாக ஒரு வருடத்தில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. நடிக்கும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுவதில்லை. கடந்த வருடத்தில் மட்டும் சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ், சங்கத்தமிழன் என்ற மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இதில் சிந்துபாத், சங்கத்தமிழன் அட்டர் பிளாப். சூப்பர் டீலக்ஸ் மட்டும் ஓடியது. மாறாக பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி, மலையாளத்தில் ஜெயராம் உடன் மார்கோனி ஆகிய படங்கள் வெளியாகியது. பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் டம்மியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடமும் அவரது படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை மட்டுமே பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம்.

சமந்தா, நயன்தாரா என இரண்டு ஜோடிகளை கொண்டு நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக இருக்கும் இந்த படம் நானும் ரவுடிதான் படத்தைப் போல பெரிய வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை கொண்டிருக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக விஜய் சேதுபதி தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top