Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தியன் 2-வை ஓரம்கட்டிவிட்டு அடுத்த படத்தை கையில் எடுத்த ஷங்கர்.. திகைத்துப்போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவை உலக அளவில் வியந்து பார்க்க வைத்த இயக்குனர்களில் ஒருவர் தான் ஷங்கர்.
இவருடைய படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புவது வழக்கம். அந்தவகையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம்தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிக் கொண்டிருந்த இந்தியன்2 .
ஆனால் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, லாக்டவுன் ஆகிய காரணங்களினால் இந்தியன் 2 படமானது டிராப் ஆகிவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதேசமயம் இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்திற்கான வேலையை துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் அந்தப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது மட்டுமில்லாமல், கே.ஜி.எப் ஹீரோ யாஷ் உட்பட முன்னணி மலையாளம் மற்றும் தெலுங்கு நடிகர்களும் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிகிறது.

vijay-sethupadhi-cinemapettai
எனவே தற்போது ஷங்கர், இந்தியன்2 படப்பிடிப்பிற்கான பணிகள் நிறுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், விஜய் சேதுபதியுடன் பிரம்மாண்ட படைப்பினை உருவாக்க தயாராகி வருவதை அறிந்த ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
