fbpx
Connect with us

Cinemapettai

கேலக்ஸி ஸ்டார் விமல் படத்தில் புதிய முயற்சி எடுக்கும் விஜய் சேதுபதி.. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை இதுதான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேலக்ஸி ஸ்டார் விமல் படத்தில் புதிய முயற்சி எடுக்கும் விஜய் சேதுபதி.. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை இதுதான்

விஜய் சேதுபதி – விமல் இருவரிடம் ஒரு ஒற்றுமை உள்ளது நம்மில் பலருக்கு தெரியும். கூத்துப்பட்டறை நாட்களில் இருந்தே இருவருக்கும் பரிச்சயம் உண்டு.

சினிமாவில் துணை நடிகர்களாக ஆரம்பித்து இன்று ஹீரோவாக நம் கோலிவுட்டில் கால் ஊன்றி இருக்கின்றனர். வெற்றியை அடைய இவர்கள் பட்ட சிரமங்கள், துன்பங்கள், போராட்டங்கள் சொல்லி மாளாது.

வருடத்திற்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு படங்கள் நடிக்கும் பெரிய ஹீரோக்கள் மத்தியில் இந்த இருவரும் சுமார் வருடத்திற்கு 7 – 8 படங்கள் நடித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். விமல் மினிமம் கேரண்டி ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்துவிட்டார்.

லாக் டவுன் முடுந்த பின் விமல் நடிக்கும் படங்களில் முக்கியமான ஒன்று குலசாமி. இப்படத்தில் கெஸ்ட் ரோலில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரமாம் அது, படத்தின் ரிலீஸ் சமயம் வரை அதை சஸ்பென்சாக வைக்க தான் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இப்படத்தில் திரைக்கதையில் உதவி செய்கிறாராம் விஜய் சேதுபதி, மேலும் வசனங்களையும் அவரே எழுத உள்ளாராம். இந்த லாக் டவுன் சமயத்தில் அந்த வேலைகளையும் தொடங்கிவிட்டார் என்கின்றார் ஒரு கோலிவுட் வாசி.

Continue Reading
To Top