fbpx
Connect with us

சிவகார்த்திகேயன்,ஜீவாவுடன் மோதும் ‘ஆக்ஷன்’ விஜய் சேதுபதி ?

சிவகார்த்திகேயன்,ஜீவாவுடன் மோதும் ‘ஆக்ஷன்’ விஜய் சேதுபதி ?

ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், கே.எஸ்.ரவிக்குமார், ஹரிஷ் உத்தமன், கபீர் சிங் மற்றும் சதீஷ் நடிப்பில் வளர்ந்து வரும் படம் ‘றெக்க’

பரபர ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வரும் ‘றெக்க’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதன்முறையாக ஸ்டைலிஷான ஆக்ஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் தொடர் ஹிட் ராசி, மாறுபட்ட கதை ஆகியவற்றால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

இந்நிலையில் அக்டோபர் 7 ம் தேதி ஆயுத பூஜை தினத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’, ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்கள் அன்று வெளியாகவுள்ளன.

இந்நிலையில் ‘றெக்க’ படமும் ஆயுத பூஜை ரேஸில் இணைவதால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top