‘நானும் ரௌடி தான்’ படத்தைத் தொடர்ந்து ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவுடன், ஜோடி சேர்கிறார் விஜய் சேதுபதி.

டெமொண்டி காலனி படப்புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் நயன்தாரா, அதர்வா முரளி, ராசி கண்ணா, அனுராக் காஹஸ்யப் (வில்லனாக நடிக்கிறார் பாலிவுட் இயக்குனர்) ஆகியோர் நடித்துள்ளனர்.


ஹிப் ஹாப் ஆதி இசை. ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு, வசனங்கள் பட்டுக்கோட்டை பிரபாகர். படத்தொகுப்பு புவன் ஸ்ரீனிவாசன். தயாரிப்பு கேமியோ பிலிம்ஸ் ஜெயக்குமார்.

அதிகம் படித்தவை:  ராதிகா சரத்குமார் விரட்டிய டிவி சீரியல் நடிகைக்கு ஆதரவளித்த விஷால்

நம் லேடி சூப்பர்ஸ்டார் புலன் விசாரணை அஞ்சலி விக்ரமாதித்யனாக நடித்துள்ளார். அதர்வாவின் அக்கா கதாபாத்திரம் அவருடையது.

விஜய் சேதுபதி

இந்நிலையில் நயன்தாராவின் கணவர் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். சிறிய ரோல், சிறுப்புத்தோற்றம் ஆனால் கதையில் ட்விஸ்ட் ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரமாம் விஜய் சேதுபதி அவர்களுடையது. இதற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது என்று சொல்லப்படுகிறது. இப்படம் ஜனவரி மாதம் வெளியாக வாய்ப்புள்ளது.

அதிகம் படித்தவை:  முடிவானது சோனம் கபூரின் திருமண தேதி ! காதல் ஜோடி போட்டோ உள்ளே !


சினிமாபேட்டை கிசு கிசு

இப்படம் அமெரிக்காவில் ஹிட் ஆன டிவி சீரிஸ் Dexter என்பதில் இருந்து இன்ஸ்பிரஷன் எடுத்துள்ளார்கள் என்று கிசு கிசுகிறார்கள் கோலிவுட்டில் விஷயம் அறிந்த சிலர்.