fbpx
Connect with us

சூப்பர் ஹிட் மலையாள பட ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

must-watch-malayalam-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஹிட் மலையாள பட ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

மோலிவுட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் தான் ‘ஐயப்பனும் கோசியும்’. இந்தப் படத்தை மலையாளத்தில் பிரபலமான கதாசரியான சாச்சி  இயக்க, பிரித்திவிராஜூம் பிஜூ மேனனும் இணைந்து  நடித்திருந்தனர்.

மேலும் இந்த படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டிகளும் நிலவி வருகின்றன.

இந்த நிலையில் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி, அவரது ரசிகர்களை குத்தாட்டம்போட வைத்துள்ளது.

அதாவது போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஒரு சின்ன பிரச்சனை எந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ‘ஐயப்பனும் கோசியும்’ என்ற படத்தின் கதை.

மேலும் தெலுங்கில் ரீமேக்காகும் இந்த படத்தில் கோஷி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக  மோலிவுட் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இதை அறிந்த விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவரது வளர்ச்சியை நினைத்து பெருமிதம் கொள்வதோடு, விஜய்சேதுபதிக்கு தங்களுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

vijaysethupathy

Continue Reading
To Top