fbpx
Connect with us

கெட்டவனுக்கும் கெட்டவன் கேடு கெட்டவன் – விக்ரம்வேதா கதையை சொன்னார் விஜய்சேதுபதி

News | செய்திகள்

கெட்டவனுக்கும் கெட்டவன் கேடு கெட்டவன் – விக்ரம்வேதா கதையை சொன்னார் விஜய்சேதுபதி

முதன் முறையாக விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இருவரும் விக்ரம்-வேதா திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான டீசல் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அலைபாயுதே படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மாதவன், இறுதியாக இறுதிச்சுற்று படத்தில் நடித்து பிரம்மாண்ட வெற்றி தந்தார். இதற்கு முன்பு லிங்குசாமி இயக்கத்தில் போலீஸ் வேடம் ஏற்று நடித்த மாதவன், இந்த விக்ரம் வேதா படத்தில் மாறுபட்ட போலீசாக நடிக்கிறார். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என மாதவனும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், உலக நாயகன் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக தான் விஜய் சேதுபதியை பார்ப்பதாக மாதவன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, விக்ரம் வேதாவில் மாதவன் வேடம் குறித்து கூறுகையில், இந்த படத்தில் மாதவன் கெட்ட போலீசாக நடித்திருப்பதாக கூறுகிறார். சாதாரணமாக ஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடக்கும் பிரச்சினையில் தான் கதைகள் வரும். ஆனால், இந்த விக்ரம் வேதா இரண்டு கெட்டவர்களுக்கிடையே நடக்கும் பிரச்சினையில் உருவாகியுள்ளாதகவும் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top