சூப்பர் டீலக்ஸ் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு நடிக்க இருந்த பிரபல நடிகை.. யாரு கண்ணு பட்டுச்சோ அவங்கனால நடிக்க முடியல!

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜ எழுதி இயக்கி விஜய் சேதுபதி, சமந்தா, பகத்ஃபாசில், ரமயாகிருஷணன், மிஷ்கின் என அருமையான காம்போவில் எடுக்கப்பட்டு 2019ல் வெளிவந்த திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ஓரளவு வசூலை ஈட்டியது. 2019ம் ஆண்டு மெர்ல்போரன்-ல் நடைபெற்ற விழாவில் சமூக சிந்தனைக்கான விருதும் பெற்றது இப்படம்.

இது நான்கு கிளைக் கதைகளைக் கொண்ட கருவாகும். முதலில் வேம்பு மற்றும் அவரின் கணவர் முகில் மற்றும் பெர்லின் எனும் காவல் அதிகாரி பற்றியது. இரண்டாவதாக ஷில்பாவாக மாறிய மாணிக்கம் அவரது மனைவி ஜோதி மற்றும் பெர்லின் எனும் காவல் அதிகாரி பற்றியது. மூன்றாவது லீலா மற்றும் அவரது கணவர் தனசேகரன் எனும் அற்புதம் மற்றும் மகன் சூரி பற்றியது. நான்காவதாக பாலாஜி (காஜி), சூரி, மோகன், வசந்த் (முட்ட பப்ஸ்) மற்றும் தூயவன் ஆகிய ஐந்து நண்பர்கள் பற்றியது.

nadhiya-cinemapettai
nadhiya-cinemapettai

இப்படியாக கதையும் திரைக்கதையும் இருக்க இப்படத்தில் ரம்யாகிருஷ்னன் நடித்த லீலா கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் எம்.குமரன் படத்தில் அம்மாவாகவும் பல்வேறு 90ஸ் படங்களில் கதாநாயகியாகவும் நடித்த நடிகை நதியா ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.

தளத்திற்கு நடிக்க வந்த நதியா இக்கதாப்பாத்திரத்தின் அம்சங்களை தெளிவாக புரிந்து பின்வாங்கி விட்டாராம். அதனை தொடர்ந்து பாகுபலி மூலம் ராஜமாதா சிவாகமி தேவியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் லீலாவாகினார்.

நீலப்படத்தின் நடிகையான இந்த கேரெக்டர் தேவையான அளவு வலுசேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்