Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி பையனா இது! அவர் மாதிரியே ஆகிட்டாரு! லாக்டோன் எபெக்ட் போல!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் விஜய் சேதுபதி(vijay sethupathi). இவரது நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் படம் அக்டோபர் 2ம் தேதி ஜி ஃபிளக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், லாபம், விஜய்யுடன் நடித்த மாஸ்டர் என வரிசையாக ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

சமீபகாலமாக நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் விஜய், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி போன்றோர் தங்களுடைய மகன்களை அவர்களது படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் சிந்துபாத். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய மகன் சூர்யா விஜய் சேதுபதியுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதில் விஜய் சேதுபதி போலவே உடல் எடை கூடி அவரது மகன் சூர்யா விஜய் சேதுபதியும் சற்று பருமனாக இருப்பது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. பல வாரிசு நடிகர்கள் ஆரம்பத்தில் உடல் பருமனாகவும் சினிமாவுக்கு வந்த பிறகு உடல் எடையை குறைப்பதும் வாடிக்கை தானே.

vijay-sethupathi-suriya-cinemapettai

vijay-sethupathi-suriya-cinemapettai

இருந்தாலும் சூர்யா விஜய் சேதுபதியின் புகைப்படம் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

Continue Reading
To Top