‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேநாளில் சிவகார்த்திகேயனின் ரெமோ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.