சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் விநியோகமும் ஜெட் வேகத்தில் பறந்து வருகிறது.

இந்நிலையில் இதே நாளில் ஜீவாவின் கவலை வேண்டாம், விஜய் சேதுபதியின் றெக்க உள்ளிட்ட படங்களும் ரிலீஸ் ஆகிறது.

அண்மையில் வெளியான தர்மதுரை, நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதால் றெக்க படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் றெக்க படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சிவபாலன் பிக்ஸர்ஸ், இப்படத்தை தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதனால், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய சிவகார்த்திகேயன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும் எனத் தெரிகிறது