செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பொண்ணுங்கன்னா அவ்ளோ கேவலமா போச்சா.. அத்துமீறி பேசிய பாக்யா வாரிசை ரோஸ்ட் செய்வாரா VJS.?

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கிறது. அதில் முக்கிய குற்றவாளியாக விஜே விஷால் தான் இருப்பாரு போல. பாக்கியலட்சுமி சீரியலில் பெண்களை மதிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் இவர்.

ஆனால் இவருடைய குணம் இப்படிப்பட்டதா என யோசிக்கும் அளவு பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்கிறார். அதிலும் சௌந்தர்யா பற்றி அவர் சக ஆண்களிடம் கொச்சையாக பேசியதும், செய்து காட்டியதும் ரொம்பவே மோசம்.

ஆண்களின் மீது தேவையில்லாமல் வந்து விழுகிறார். இப்படி நிற்கிறார் அப்படி செய்கிறார் என கடந்த வாரம் பேசி இருந்தார். அப்போதே சில எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனால் இந்த வாரம் பார்த்தால் சௌந்தர்யாவுடன் சிரித்து பேசுவதும் டான்ஸ் ஆடுவதும் என பச்சோந்தி போல் நிறம் மாறிவிட்டார். இதையெல்லாம் பார்த்த சௌந்தர்யாவின் ரசிகர்கள் இப்போது அவரை மீம்ஸ் போட்டு வச்சு செய்து வருகின்றனர்.

எல்லை மீறி பேசும் பாக்கியலட்சுமி விஷால்

அதே சமயம் பெண்கள் தரப்பில் சில கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. உன் வீட்டு பெண்ணாக இருந்தால் இப்படி பேசுவியா. இதே நிகழ்ச்சியில் ரஞ்சித் பெண்களிடம் கன்னத்தை தொட்டு பேசுகிறார்.

அப்பாஸ்தானத்தில் நடந்து கொள்கிறார் என்று அதற்கு நியாயம் சொல்கிறார்கள். அதுவே சௌந்தர்யா என்றால் அசிங்கமாக பேசலாமா. விஷால் இப்படி எல்லை மீறி பேசியது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் ஆண்களையும் தூண்டி விட்டுள்ளார்.

அதனாலேயே நேற்று தீபக் சௌந்தர்யா மீது கோபப்பட்டு மேனர்ஸ் இல்லை என பேசினார். ஒரு விதத்தில் விஷாலின் பேச்சும் இதற்கு காரணமாக இருக்கலாம். இப்போதெல்லாம் முதுகுக்கு பின்னால் அதிகமாக புரணி பேச ஆரம்பித்துள்ள பாக்யா வாரிசை இந்த வாரம் விஜய் சேதுபதி தட்டி கேட்பாரா? என பார்ப்போம்.

- Advertisement -

Trending News