வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

முழு வன்மத்தையும் இறக்கிய சாச்சனா.. ஓவர் ஆட்டம் போடும் லிட்டில் பிரின்சஸ், குட்டு வைப்பாரா VJS.?

Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூர மொக்கையாக நகர்கிறது. அதில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் தர்பாராக மாறி இருக்கிறது. இரு தேசங்களில் ராஜா ராணி என ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஆண்கள் அணியை பொறுத்தவரையில் ராணவ் ராஜாவாகவும் பெண்கள் அணிக்கு சாச்சனா ராணியாகவும் இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அவர் ஏதோ ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருப்பது போல் அலப்பறை கொடுத்து வருகிறார்.

அதிலும் உணவு விஷயத்தில் அவர் செய்வதை பார்க்கும் போது நீ விளையாட வந்தியா சாப்பிட வந்தியா என கேட்க தோன்றுகிறது. இதையே நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

ஓவர் ஆட்டம் போடும் சாச்சனா

அதில் ராணி வேடம் போட்ட பிறகு அவருடைய ஆட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் ஜெப்ரிக்கு 100 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என அவர் கொடுத்த தண்டனை முழு வன்மம் தான்.

தன்னை கலாய்த்தார் என்ற காரணத்திற்காகவே அவர் இப்படி பழிவாங்கி இருக்கிறார். அதை அவரே ஒப்புக்கொண்டது போட்டியாளர்கள் உட்பட பார்வையாளர்களையும் கடுப்பேற்றியுள்ளது.

முதல் நாள் இவரை வீட்டை விட்டு துரத்தியதோடு இருந்திருக்கலாம். மீண்டும் வந்திருக்கவே கூடாது எதற்கெடுத்தாலும் அழுகை சண்டை என இவர் போடும் ட்ராமா எல்லை மீறி வருகிறது. விஜய் சேதுபதியும் ரீல் மகளை எதுவும் கேட்பதில்லை.

அதனாலேயே ஆடியன்ஸ் இப்போது இந்த லிட்டில் பிரின்சஸை வீட்டை விட்டு துரத்துங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அது மட்டும் இன்றி விஜய் சேதுபதி இந்த வாரம் இவர் செய்த அத்தனை தவறுகளையும் தட்டிக் கேட்க வேண்டும் என்ற கருத்துக்களும் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

Trending News