
சமீபகாலமாக விஜய் சேதுபதி அதிக சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளன. அளவுக்கு மீறி ஆசைப்படுவதாகவும் அவர் மீது ஒரு விமர்சனம் உள்ளது.
தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய் சேதுபதி. தற்போதைக்கு கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் நடிகர்களில் முதலிடம் இவருக்குத்தான்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். சினிமாவை தாண்டி வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல் போன்ற அனைத்திலுமே தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
அந்தவகையில் அடுத்ததாக சன் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சன் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.
விஜய்சேதுபதி பணத்தாசையில் சுற்றுகிறார் என்பது போன்ற செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் விஜய் சேதுபதி, தனக்கு பணத்தாசை எதுவுமில்லை எனவும், ஒரு நடிகனாக மக்களை மகிழ்விக்க ஆசைப்படுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் வாசிகள், அப்புறம் எதுக்கு சார் ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்கணும், மக்களை மகிழ்விக்க இலவசமாக நடிச்சுட்டு போலாமே எனவும் கேள்வி கேட்டுள்ளனர், இதற்கு விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய பாணியில் எப்படி பதில் கொடுக்கப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
