புஷ்பா 2 படத்திற்கு விஜய் சேதுபதியின் சம்பளம்.. மாஸ் இல்லாமலா மாஸ்டருக்கு இவ்வளவு பேசியிருக்காங்க?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்திய மொழி படமாக வெளியானது புஷ்பா. இப்படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடியிருந்தார். மேலும் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸில் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களின் பார்வை புஷ்பா 2 படத்தின் மீது உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கயுள்ளது. இந்நிலையில் புஷ்பா தி ரூல் படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளது. புஷ்பா தி ரைஸ் படத்தின் வசூலை அப்படியே போட்டு இப்படத்தில் எடுக்க உள்ளனர்.

அதாவது 350 கோடி பட்ஜெட்டில் ஆயிரம் கோடி வசூலுக்காக பலே திட்டம் போட்டு உள்ளனர். மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அப்போது விஜய்சேதுபதி பல படங்களில் பிஸியாக இருந்ததால் புஷ்பா படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இதனால் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் புஷ்பா தி ருல் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் விக்ரம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் புஷ்பா 2 படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் விஜய் சேதுபதி வெப் சீரிஸில் நடிக்க 35 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி ஒரு படத்தில் வில்லனாக நடிக்க தற்போது 15 லிருந்து 20 கோடி வரை சம்பளம் பேசப்படுகிறது. ஆனால் புஷ்பா படத்தில் 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விட்டா புஷ்பா படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் சம்பளத்தையே விஜய் சேதுபதி கேட்பார் என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் கொடூர வில்லனாக இருக்கும் என கூறப்படுகிறது. புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகயுள்ளது. இப்படம் குறித்து அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்