Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த காரணத்தால் தான் சால்ட் அன்ட் பெப்பர் கெட்-அப்: மனம் திறந்த விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதை சுவாரஸ்யமாக மக்களிடையே கொண்டு சேர்த்து மக்களிடம் வரவேற்பு பெற்று வலம் வருபவர் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
ஆரம்பகட்டத்தில் விஜய் சேதுபதி பல அவமானங்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை பார்த்து வந்த விஜய் சேதுபதி சினிமா மேல் உள்ள மோகத்தினால், வாய்ப்புக்காக ஏறி இறங்காத படிகள் கிடையாது என்பது நாம் அறிந்த விஷயமே.
சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் வைரலானது. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் விஜய் சேதுபதி அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இது எந்த படத்தின் கெட் அப் என்ற பேச்சும் எழுந்தது.

vijay-sethupathi-latest-cinemapettai
இந்நிலையில் இந்த லுக்கின் காரணத்தை பற்றி சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் விவரித்துள்ளார் சேது. ”லாக்டவுனா இருக்குறதுனால டை அடிக்க வேண்டாம்னு விட்டுட்டேன் சார். அதான். மூஞ்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமே.
பூமியோட குணம் ஒன்னு இருக்கு சார். ஒரு புல் தரை இருக்கு. அதுல நடந்துட்டே இருந்தா பாதை வந்துடும். நடக்கமா விட்டிங்கனா திரும்ப புல் மொளச்சுடும். recover ஆகும் தன்மை பூமியை போல மனுசனுக்கு இருக்கு என நான் நம்புறேன்” என சொல்லியுள்ளார்.
