fbpx
Connect with us

Cinemapettai

மாஸ்டர் பட கேரக்டரை சொல்லி விஜய் ரசிகர்களை வெறியேற்றிய விஜய் சேதுபதி.. சொல்லும் போதே செமையா இருக்கே

vijay-sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் பட கேரக்டரை சொல்லி விஜய் ரசிகர்களை வெறியேற்றிய விஜய் சேதுபதி.. சொல்லும் போதே செமையா இருக்கே

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் இறுதி கட்டமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளன.

காதலர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் ஏதேனும் ஒரு அப்டேட் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. மாஸ்டர் படத்தின் முக்கிய அம்சமாக விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனாலேயே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. விஜய் சேதுபதி ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக நடித்தவர். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்த தகவலை வெளியிட்டு விஜய் ரசிகர்களை வெறியேற்றி உள்ளார்.

அவர் கூறியதாவது, தனக்கு ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் எண்ணம் இல்லை எனவும், கதாப்பாத்திரத்தின் வலிமை குறித்து தான் தொடர்ந்து நடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு இருந்தால் மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தை நான் தவறவிட்டு இருப்பேன் எனவும் விஜய் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.

மேலும் தல அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் உறுதி அளித்துள்ளார். ஆகையால் தல தளபதி ரசிகர்கள் இருவரும் ஹேப்பி அண்ணாச்சி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top