இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என உறுதியாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை படம் செப்டம்பர் இறுதியில் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.