அமீர்கான் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி.. காரணம் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு கைவசம் அதிக படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி அமீர்கான் படத்தில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகம் முழுவதும் 1994ஆம் ஆண்டு வெளியான பாரஸ்ட் கேம்ப் ஹாலிவுட் படம் வசூலில் சாதனை புரிந்ததுடன், பல விருதுகளையும் அள்ளியது. உலகின் மிகச் சிறந்த 10 படங்களில் இடம் பிடித்தது.

இப்படத்தை தற்போது லால் சிங் சட்டா என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கி வருகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன் படத்தையும் தயாரிக்கிறார்.

70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படத்தில் 2ஆம் உலகப்போர் காட்சிகள் இடம் பெறுவதால், சக போர் வீரனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால், குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு நடக்காததால், படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொண்டார். தற்போது அவருக்கு பதில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கிறார். இவர் தொடர்பான காட்சிகளை லடாக் பகுதியில் படமாக்கி வருகிறார்கள்.

amirkhan-vijaysethupathi-cinemapettai
amirkhan-vijaysethupathi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்