fbpx
Connect with us

‘தெறி’ படத்திற்கு விஜய் எடுத்த அதே முடிவை தன் படத்திற்கு எடுத்த விஜய்சேதுபதி

‘தெறி’ படத்திற்கு விஜய் எடுத்த அதே முடிவை தன் படத்திற்கு எடுத்த விஜய்சேதுபதி

vijay-vijay-sethupathiகோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய்சேதுபதி முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள ‘சேதுபதி’ திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. அருண்குமார் இயக்கிய இந்த படத்தில் ‘பீட்சா’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்சேதுபதியுடன் ரம்யா நம்பீசன் ஜோடி சேர்ந்துள்ளார்.

‘நானும் ரெளடிதான்’ வெற்றி படத்திற்கு பின்னர் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த படம் ஹிட்டானால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அருண்குமார் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ படம் ஹிட்டானால் ‘தெறி 2’ உருவாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் விஜய் படக்குழுவினர் எடுத்த அதே முடிவை விஜய்சேதுபதி படக்குழுவினர்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top