தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் திரையில் நடிக்கும் போது நன்றாக பேசுகிறாரோ இல்லையோ இவர் செல்லும் நேர்காணல்களில் மிக அதிகமாகவும், சில நேரங்களில் மட்டும் மிக தெளிவாகவும் பேசக்கூடியவர். இன்று பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக இவருடைய பொன்மொழிகள் தான் இருக்கிறது.
அந்த அளவிற்கு மோட்டிவேஷனல் ஆக பேசுவதில் இவர் வல்லவர். இப்படி இருக்கையில் இவருடைய சமீபத்திய நேர்காணல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அந்த நேர்காணலில் வழக்கம்போல விஜய் சேதுபதி தன்னுடைய பாணியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது சினிமா என்ன உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என்ற கேள்வி எழும்போது அவர் கூறிய பதில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ரஜினிகாந்த் எப்போதும் மார்க்கெட் குறையாத நடிகராக இருப்பதால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். எனவே விஜய் சேதுபதி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நேரடியாக அவர் கூறிய பதில், சினிமாவிற்குள் நுழைந்தால் முதலில் ரஜினிகாந்த் ஆவது எப்படி என்றுதான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவருடைய மார்கெட் இன்றளவும் சரியாமல் அவர் எப்படிப் பார்த்துக் கொள்கிறார் அதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு படம் எடுப்பது பல நல்ல விமர்சனங்களை சம்பாதிக்க வேண்டும் என்பதையும் தாண்டி தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் மேலும் லாபம் பார்க்க வேண்டும் என்று தான் தற்போது தமிழ் சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தப் பாதையை முதலிலேயே போட்டு வைத்தவர் ரஜினிகாந்த். அந்த தந்திரம் தான் முதலில் சொல்லித் தரப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் கமல்ஹாசனை நாம் மறந்துவிட முடியாது யாரும் செய்ய முடியாத பல முயற்சிகளை செய்து மிக பிரம்மாண்டமான படங்களை தந்து அவர் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்று இருக்கிறார். ரஜினி கமர்ஷியலாக ஹிட் கொடுத்தாலும் கமலின் பாணியில், தமிழ் சினிமா பல உச்சகட்ட பிரம்மாண்டங்களை சந்தித்து இருக்கிறது என்று கமலை புகழ்வதில் ஒரு டோஸ் கூட சேர்த்து பேசினார்.
மேலும் கமலஹாசன் அவருடன் நடிக்கும்போது எனக்கு பத்து தலை கொண்டவனாக நான் கருதுகிறேன். ஏனென்றால் கமலஹாசனின் ஒவ்வொரு ஆசைகளும் என்னால் கணிக்க முடியவில்லை என விஜய் சேதுபதி கூறினார். மேலும் கமலஹாசன் பொருத்தவரை சினிமா துறையை தான் அவர் உயிராக நினைக்கிறார் தவிர பணத்தை கிடையாது அதாவது ஹே ராம் படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் கமலஹாசனுக்கு பெயர்பெற்று கொடுத்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவினார் அப்போது கமலஹாசனிடம் இவ்வளவு பெரிய இழப்பு நீங்கள் பார்த்துள்ளீர்களா அது எப்படி உங்களுக்கு இருக்கிறது எனக் கேட்டதற்கு.
கமல்ஹாசன் வாழ்க்கையில் இழப்பு என்பது மீண்டும் திரும்ப பெற முடியாதது என் அம்மா இறந்தது என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு அது என்னால் பெற முடியாது. ஆனால் பணம் பெரிய இழப்பு கிடையாது அது எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் என மிக அறிவுபூர்வமாக கூறினார். இந்த ஒரு வீடியோவை பார்த்து கமலஹாசனின் ஒவ்வொரு பேட்டி வீடியோக்களையும் பார்த்து அசந்ததாக விஜய் சேதுபதி கூறினார். இவர் பேசியதில் பல உண்மைகள் புதைந்து இருக்கிறது என்று சமூக வலைதள வாசிகள் இந்த பதிவை மிக அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்