Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொழுக்கு மொழுக்கு ஹீரோயினுடன் மோலிவுட்டில் இணையவிருக்கும் விஜய் சேதுபதி.. டபுள் மாஸ்!
தமிழ் சினிமாவில் ‘மக்கள் செல்வன்’ என்ற செல்லப் பெயருடன் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தன்னுடைய இரண்டாவது மலையாளப்படத்தில் கையெழுத்திட்டுள்ளார் எனும் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதாவது ஏற்கனவே மோலிவுட்டில் ‘மார்க்கோனி மாத்தாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் கால் பதித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் இவர் தற்போது தான் நடித்த ‘96’ என்ற தமிழ் படத்தின் மலையாள ரீமேக்கில் நடிகை நித்யா மேனனுடன் ஜோடி போட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் அண்டோ ஜோசப் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு விஜய் சேதுபதி கடந்த ஆண்டே சம்மதம் தெரிவித்ததாகவும், கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்த படத்தின் சூட்டிங் தள்ளிப்போனதாகவும் கூறுகின்றனர் மோலிவுட் வட்டாரங்கள்.
இதையடுத்து தற்போது இந்தப் படத்தில் நடிக்க கூடிய மற்ற கதாபாத்திரங்களும், சூட்டிங் ஸ்பாட்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் படக்குழுவினர்.
மேலும் இந்த படத்தின் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர்கள் அவரை மீண்டும் ‘96’ போன்ற ஒரு படத்தில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

vijay-sethupathi-cinemapettai
