Tamil Cinema News | சினிமா செய்திகள்
சைலன்டாக காய் நகர்த்தும் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஜோடி.. 19(1)(A) விமர்சனம்! தேசிய விருதுக்கு வாய்ப்பா.?
மலையாள சினிமாவில் நேரடி ஓடிடி ரிலீசாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ள படம் தான் 19(1)(A). லோ பட்ஜெட் யதார்த்த சினிமா. பேச்சு சுதந்திரம் என்பதற்கான ஆர்டிகிள் 19 ஐ மட்டும் மையப்படுத்தி படத்தை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக பெண் இயக்குனர் வி எஸ் இந்து.
கதை– ஆர்ப்பாட்டம் இல்லாத வாழ்க்கை தன் வீடு, அப்பா, ஜெராக்ஸ் கடை, ஒரு தோழி மற்றும் நண்பன் என செல்கிறது நித்யா மேனனின் வாழக்கை. ஒரு நாள் இவர் கடைக்கு வருகிறார் விஜய் சேதுபதி, தான் எழுதியுள்ள புதிய புத்தகத்தின் பக்கங்களை கொடுக்கிறார், அதனை ஜெராக்ஸ் போட சொல்லிவ்ட்டு செல்கிறார்.
விஜய் சேதுபதி சுட்ட கொல்லப்பட்ட செய்தி தெரியவருகிறது. அவர் புரட்சிகரமான எழுத்தாளர் என்பதனையும் தெரிந்துகொள்கிறார் நம் நாயகி. அவரின் எழுத்துக்கள் அவள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பதிப்பு அச்சகம், விஜய் சேதுபதியின் வீடு, இரங்கல் கூட்டம் என சுற்றி வருகிறார் நித்யா மேனன். இறுதியில் அவரின் “கருப்பு” அந்த கதை அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என தனது கடையில் ஜெராக்ஸ் போட்டு சில முக்கிய நபர்களுக்கு அனுப்புகிறாள். அந்த எழுத்தின் தாக்கம் என்ன என்பது அனைவருக்கும் தெரிகிறது.
பின்னர் தான் மேற்கொண்டு கல்லூரியில் படிக்க புதிய வித்வேகத்துடன் அப்ளை செய்கிறார், கடையை அடைகிறார். பின் அவளுக்கு என்ன நிகழ்கிறது என்பதனை சொல்லாமல் சொல்லி முடிக்கிறார் இயக்குனர்.
சினிமாபேட்டை அலசல்– ஒரு புத்தகத்தின் அத்தியாயம் போன்றது தான் இப்படம். கருத்து சுதந்திரம் என்பதனை வைத்து அதில் தனது நிலைப்பாடு என்ன என்பதனை சொல்லியுள்ளார் இயக்குனர் இந்து. விஜய் சேதுபதி, நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன் என்ற இந்த மூவரின் நடிப்பு மற்றும் கதாபாத்திர அமைப்பு அருமை.
வீட்டில் அமர்ந்த படி பார்க்க ஏற்ற சினிமா. சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள், எனினும் மற்றவர்களுக்கு இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5
