Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் அடுத்த இலக்கு அஜித்.. ஏன் இந்த விபரீத விளையாட்டு
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் முன்னனி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார். தமிழை தாண்டி, தெலுங்கு மற்றும் இந்தியிலும் துவம்சம் செய்து வருகிறார். இவர் தமிழில் தற்போது மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
டாப் ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி வில்லானாகவும் நடித்து வருகிறது. ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஸ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நெய்வேலியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக அஜித்துக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகிடைத்தால் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அஜித் படத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் சேதுபதி விகடன் விருது நிகழ்ச்சியில் ஹீரோவாக வில்லனாக மாறி மாறி நடிப்பது குறித்த கேள்விக்கு நான் நடிகன் என்ற பெயருடன் இருந்தால் போதும். எனக்கு டாப் ஹீரோ என்ற இமேஜ் எல்லாம் தேவையில்லை. இமேஜ் என்பது மிகச்சிறியது.
அதற்குள் அடைபடவிரும்பவில்லை என்று தெரிவித்து இருந்தார். தான் நடிகனாக இருப்பதே பெரும் வரம் என்று கூறியிருந்தார்.
